ஈராக்‍கில் அமெரிக்‍க தூதரகத்தை குறிவைத்து, ஈரான் நடத்திய ராக்கெட் குண்டு வீச்சு தாக்‍குதல் - இருநாடுகளுக்‍கு இடையே மீண்டும் போர்ப்பதற்றம்

Jan 21 2020 12:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈராக்‍ தலைநகர் பாக்‍தாத்தில் உள்ள அமெரிக்‍க தூதரகத்தை குறிவைத்து, ஈரான் 3 ராக்கெட் குண்டுகள் வீச்சுதாக்‍குதல் நடத்திய சம்பவத்தால், இருநாடுகளுக்‍கு இடையே உச்சக்‍கட்ட மோதல் போக்கு நிலவி வருகிறது.

ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் கடந்த சில வாரங்களாக நடந்து வரும் மோதல் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. ஈரானின் தளபதி சுலைமானி கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் வகையில் அமெரிக்க வீரர்களைக் குறிவைத்து ஏற்கனவே இருமுறை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில் பாக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அருகே 3 ராக்கெட் குண்டுகள் விழுந்ததாக AFP நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் இரு குண்டுகள் உள்ளூர் நேரப்படி அதிகாலை ஒரு மணியளவில் தூதரகத்தின் பசுமை மண்டலத்தில் விழுந்ததாகவும், மற்றொரு குண்டு டைகிரிஸ் நதிப்படுகையில் விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் இருநாடுகளுக்‍கு இடையேயான மோதல் மேலும் முற்றியுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு ஈரான் ஆதரவு பெற்ற துணை ராணுவப்படையினரே காரணம் என அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00