தைவான் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சாய் இங் வென்னுக்கு தலாய் லாமா வாழ்த்து
Jan 21 2020 6:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தைவான் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சாய் இங் வென்னுக்கு தலாய் லாமா வாழ்த்துத் தெரிவித்துள்ளார். தைவான் அதிபராகப் பதவி வகித்துவந்த சாய் இங் வென், கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த தேர்தலில் மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தைவான் நாட்டைத் தனது அங்கமாகவே இதுவரை கருதிவரும் சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் சாய் இங்-வென் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக தலாய் லாமா தெரிவித்துள்ளார். 1958ஆம் ஆண்டு திபெத்தை சீனா ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து தலாய் லாமா இந்தியாவில் தஞ்சமடைந்து இமாச்சலப் பிரதேசத்தின் தரம்சாலாவில் வசித்துவருவது குறிப்பிடத்தக்கது.