அமெரிக்‍க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சந்திப்பு : காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஆலோசனை

Jan 22 2020 11:45AM
எழுத்தின் அளவு: அ + அ -

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, அமெரிக்‍க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆலோசனை நடத்தினார்.

உலக பொருளாதாரத்தின் உச்சி மாநாடு சுவிட்சர்லாந்தின் டாவோசில் நடைபெறுகிறது. மாநாட்டிற்கிடையே, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்தித்துப் பேசினார். அப்போது, காஷ்மீர் பிரச்னை குறித்தும், அதில் இந்தியாவின் நிலைப்பாடு மற்றும் செயல்பாடுகள் குறித்தும் இம்ரான் கான் ஆலோசனை நடத்தினார்.

இம்ரான் கானுடனான சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரின் நிலையை அமெரிக்‍கா உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், காஷ்மீர் குறித்து இம்ரான் கானுடன் கலந்துரையாடல் நடத்துவதுடன், தங்களால் ஆன உதவியை நிச்சயம் செய்வோம் என்றும் குறிப்பிட்டார். பாகிஸ்தான் - அமெரிக்கா இடையே சுமுகமான உறவு இருப்பதாகவும் டிரம்ப் கூறினார்.

தொடர்ந்து பேசிய இம்ரான் கான், இந்தியாவின் ராணுவ நடவடிக்கைகள் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், பிராந்தியத்தில் பாகிஸ்தான் எப்போதும் அமைதியை விரும்புவதாகவும் கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00