சீனாவில் உருவான கரோனா வைரஸ் தாக்‍குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 17ஆக உயர்வு - சவூதி அரேபியாவில் பணியாற்றும் இந்திய செவிலியருக்‍கு வைரஸ் பாதிப்பு

Jan 23 2020 8:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

சவூதி அரேபியா மருத்துவமனையில் பணியாற்றிய இந்திய செவிலியர் கரோனா வைரஸ் தாக்‍குதலுக்‍கு ஆளாகியிருப்பதை, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.

சீனாவில் உருவாகியுள்ள கரோனா வைரஸ் தாக்‍குதலுக்‍கு இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 17ஆக உயர்ந்துள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது. இந்த கரோனா வைரஸ் தாக்‍குதல் உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில், வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியர்களிடையே கரோனா வைரஸ் தாக்‍குதல் குறித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சவூதி அரேபியாவில் உள்ள அல் அயாத் மருத்துவமனையில் பணியாற்றும் நூற்றுக்‍கும் மேற்பட்ட இந்திய செவிலியர்களிடம் கரோனா வைரஸ் தாக்‍குதல் குறித்து பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், கேரளாவில் இருந்து வந்த செவிலியர் கரோனா வைரசால் பாதிக்‍கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, வெளியுறவுத்துறைக்‍கான இணை அமைச்சர் திரு.வி.முரளிதரன் டிவிட்டர் பக்‍கத்தில் தெரிவித்துள்ளார். பாதிக்‍கப்பட்ட அந்த செவிலியர், சவூதி அரேபியாவில் உள்ள அசீர் தேசிய மருத்துவமனையில் சேர்க்‍கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00