ஈராக்கிலிருந்து அமெரிக்கப் படையினர் வெளியேற வலியுறுத்தி நடைபெற்ற போராட்டம் : பாக்தாதில் ஏராளமானோர் குவிந்து முழக்‍கம்

Jan 25 2020 4:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈராக்கிலிருந்து அமெரிக்கப் படையினர் வெளியேற வலியுறுத்தி, தலைநகர் பாக்தாதில் மாபெரும் கண்டன பேரணி நடைபெற்றது. ஈராக்கில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரான் ராணுவப்படை தலைவர் காசிம் சுலைமானி, ஈராக் துணை ராணுவ தளபதி அபு மஹதி அல் முகந்திசும் உள்பட பலர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகளை உடனடியாக வெளியேற்ற வேண்டுமென அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இதனை ஏற்க அமெரிக்‍கா திட்டவட்டமாக மறுத்து வருகிறது.

இந்நிலையில், அமெரிக்க படைகளை வெளியேற்ற வலியுறுத்தி பாக்தாத்தில் 2 இடங்களில் ஷியா பிரிவினர் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியின்போது, அமெரிக்‍கப் படைகள் வெளியே வலியுறுத்தி முழக்‍கங்கள் எழுப்பப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00