சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,380-ஆக அதிகரிப்பு

Feb 14 2020 9:13PM
எழுத்தின் அளவு: அ + அ -
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,380 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வுஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனோ வைரஸ், சீனா முழுவதும் வேகமாக பரவியது. வுஹான் நகரில் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. நேற்றைய நிலவரப்படி, சீனாவில் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,367 ஆக இருந்தது. இந்த நிலையில், பலி எண்ணிக்கை 1,380 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 64 ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 5,090 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அதில், 4,823 பேர் ஹூபே மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் யோகாஹாமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசு கப்பலில், மேலும் ஒரு இந்தியருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இருவருக்கு கொரோனா வைரஸ் உறுதியான நிலையில், மேலும் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் கப்பலில் சிக்கியுள்ள இந்தியர்கள் தங்களை உடனடியாக மீட்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00