ஜப்பான் சொகுசு கப்பல் : கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள 3 இந்தியர்களின் உடல்நிலை சீராக உள்ளது - இந்திய தூதரகம்

Feb 16 2020 4:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜப்பான் சொகுசு கப்பலில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள மூன்று இந்தியர்களின் உடல்நிலை சீராக உள்ளதென, இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

ஜப்பானிலிருந்து 3 ஆயிரத்து 700 பயணிகளுடன் ஹாங்காங் சென்று மீண்டும் ஜப்பான் திரும்பிய சொகுசு கப்பலில், சிலருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பது அண்மையில் தெரியவந்தது. இதையடுத்து, வைரஸ் பரவாமல் தடுக்க இக்கப்பல், யோகோஹாமா துறைமுகம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த கப்பலில் இதுவரை 286 பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கப்பலில் 6 தமிழர்கள் உட்பட மொத்தம் 138 இந்தியர் சிக்கியுள்ளனர். இதில், 3 தமிழர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட மூன்று இந்தியர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மூவரின் உடல்நிலையும் சீராக உள்ளதாக, ஜப்பானில் உள்ள இந்திய தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது. இதனிடையே தங்களை உடனடியாக மீட்கக்கோரி கப்பலில் சிக்கியுள்ள இந்தியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00