ஒலிம்பிக் போட்டியை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்று - வரும் மே மாதத்திற்குள் கட்டுக்குள் வராவிட்டால் ஜப்பான் ஒலிம்பிக் போட்டிகள் ரத்தாக வாய்ப்பு

Feb 26 2020 11:40AM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா வைரஸ் வரும் மே மாதத்திற்குள் கட்டுக்குள் வராவிட்டால், ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிகள் ரத்தாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவின் ஹூபே மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், அமெரிக்கா, ஜப்பான், தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளுக்கும் வேகமாக பரவியது. ஜப்பான் முழுவதும் 150-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இதனிடையே அந்நாட்டின் தலைநகர் டோக்கியோவில், வரும் ஜூலை 24-ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவுள்ளன. கொரோனா வைரசின் தாக்கத்தால், அங்கு திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. வரும் மே மாதத்திற்குள் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வராவிட்டால், ஒலிம்பிக் போட்டிகள் ரத்தாக வாய்ப்புள்ளது என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் மூத்த உறுப்பினர் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்றவோ, ஒத்தி வைக்கவோ திட்டமில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00