பாக்‍ ஜலசந்தி கடற்பகுதியை நீச்சல் சாதனை மூலம் கடந்த அமெரிக்‍கா மற்றும் இங்கிலாந்து நாட்டவருக்‍கு தனுஷ்கோடியில் அனுமதி மறுப்பு - உரிய அனுமதி கடிதம் இருந்தும் ஏற்கப்படாததால், இலங்கையின் தலை மன்னாருக்‍கு பயணம்

Feb 27 2020 12:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

பாக் ஜலசந்தி பகுதியை நீந்திக்கடந்து சாதனை படைத்த, அமெரிக்க மற்றும் இங்கிலாந்து நாட்டு நீச்சல் வீரர்கள், அனுமதி மறுக்‍கப்பட்ட காரணத்தால், இலங்கை தலைமன்னாருக்கு திரும்பி அனுப்பப்பட்டனர்.

சர்வதேச அளவில் பல்வேறு நீச்சல் போட்டிகளில் சாதனை படைத்த, அமெரிக்காவைச் சார்ந்த எடி ஹை என்ற பெண்மணியும், இங்கிலாந்தைச் சேர்ந்த ஆடம் போஸ் என்பவரும், இலங்கையிலுள்ள தலைமன்னார் முதல் தமிழகத்திலுள்ள தனுஷ்கோடி வரையிலான 30 கிலோ மீட்டர் தூரத்தை, 10 மணி 15 நிமிடங்களில் நீந்தி கடந்து சாதனை புரிந்தனர். இந்தியா மற்றும் இலங்கை என, இரு நாட்டு அரசுகளிடமும் உரிய அனுமதி பெற்ற பிறகே, இவர்கள் தங்கள் சாதனை பயணத்தை தொடங்கினர். இந்திய கடற்பகுதியில் கடலோர காவல்படையின் ஹொவர் கிராஃட் கப்பலும் பாதுகாப்பினை வழங்கினர். எனினும், இலங்கையிலிருந்து நீந்தி பாக்ஜலசந்தியை கடந்த இவர்களுக்‍கு தனுஷ்கோடி பகுதிக்குள் நுழைய அனுமதி மறுக்‍கப்பட்டது. இதனால் வேறு வழியின்றி, அவ்விருவரும் அங்கிருந்து படகு மூலம் தலைமன்னாருக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00