கொரோனா பாதிப்பை ஒரு மணி நேரத்தில் உறுதிப்படுத்தும் சாதனத்தை சர்வதேச அணுசக்தி கழகம் உருவாக்கியுள்ளதாக தகவல்

Mar 21 2020 11:48AM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரஸ் பாதிப்பை ஒரு மணி நேரத்தில் உறுதிப்படுத்தும் அணுசக்‍தி அடிப்படையிலான தொழில்நுட்ப சாதனத்தை, சர்வதேச அணுசக்தி கழகம் உருவாக்கியுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.

ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் அமைப்புடன் இணைந்து அதன் உறுப்பு நாடுகளின் கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்துக்கு உதவும் நோக்கில், அணுசக்தி தொழில்நுட்பம் அடிப்படையிலான உபகரணத்தை ஐ.ஏ.இ.ஏ. எனப்படும் சர்வதேச அணுசக்தி கழகம் உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு நபருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பதை உறுதிப்படுத்த, தற்போது, பல மணி நேரங்கள் ஆகும் சூழலில், இந்த தொழில்நுட்பம் மூலம், ஒரு மணி நேரத்தில் உறுதிப்படுத்த முடியும் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்ப சாதன உதவியை ஏற்கெனவே 40 நாடுகள் கேட்டிருக்கும் நிலையில், இந்தியாவுக்கும் தரத் தயாராக இருப்பதாக ஐ.ஏ.இ.ஏ. அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால், இந்த தொழில்நுட்ப உதவியை பெற, இந்தியாவிடமிருந்து இதுவரை எந்த கோரிக்கையும் விடுக்கப்படவில்லை என ஐ.ஏ.இ.ஏ. தெரிவித்துள்ளது. அணுசக்‍தி அடிப்படையிலான சாதனத்தின் விலை, 80 லட்சம் முதல் 90 லட்சம் ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00