கொரோனா தொற்றால் உலக அளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரமாக உயர்வு : 3 லட்சத்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நோய் தொற்றால் பாதிப்பு - வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்கா, இத்தாலி, ஈரான் உள்ளிட்ட நாடுகள் திணறல்

Mar 22 2020 4:25PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா தொற்றால் உலக அளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரம் பேர் பலியாகியுள்ள நிலையில், 3 லட்சத்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நோய் தொற்றால் பாதிக்‍கப்பட்டுள்ளனர். அமெரிக்கா, இத்தாலி, ஈரான் உள்ளிட்ட நாடுகள் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன.

சீனாவில் உருவெடுத்த கொரோனா தொற்றால், உலக அளவில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சீனாவில் இதுவரை 3 ஆயிரத்து 255 பேர் உயிரிழந்த நிலையில், 81 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றால் பாதிக்‍கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவில் 3-வது நாளாக புதிதாக யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவை விட இத்தாலியில் கொரோனா வைரசுக்‍கு பலியானோர் எண்ணிக்‍கை நாளுக்‍கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 793 பேர் பலியாகினர். ஒருநாளில் ஏற்பட்ட அதிகபட்ச உயிரிழப்பு இதுவாகும். இத்தாலியில் வைசஸ் பாதிப்பால் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 825 ஆக அதிகரித்துள்ளது. 53 ஆயிரத்து 578 பேர் பாதிக்‍கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதைத் தொடர்ந்து ழுழு அடைப்பை மக்கள் கடைப்பிடிக்க ராணுவத்திற்கு அந்நாட்டு அரசு அழைப்பு விடுத்துள்ளது.

ஸ்பெயினில் கொரோனா வைரஸ் தொற்றால் இதவரை ஆயிரத்து 378 பேர் உயிரிழந்துள்ளனர். 25 ஆயிரத்து 374 பேர் பாதிக்‍கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து, அனைத்து ஹோட்டல்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி 123 பேர் அடுத்தடுத்து இறந்துள்ளனர். இதனால் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 556 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 20 ஆயிரத்து 610 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது என அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் நேற்று மட்டும் 5 ஆயிரத்து 620 பேருக்கு இந்த வைரஸ் தாக்கியது. அங்கு இதுவரை 288 பேர் பலியாகியுள்ள நிலையில், 24 ஆயிரத்து 116 பேர் பாதிக்‍கப்பட்டுள்ளனர். மொத்தமாக கலிபோர்னியா, நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட 50 மாகாணங்களிலும் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்க அரசு இதை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது.

இங்கிலாந்தில் இதுவரை 233 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நோய் தொற்றால் பாதிக்‍கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, நாடு முழுவதும் உள்ள கடைகள், மால்கள், சொகுசு விடுதிகள் மற்றும் உணவகங்கள் மூட பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டுள்ளர். கொரோனா வைரஸை தடுக்க அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுவரை உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 13 ஆயிரத்தை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00