கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறும் உலக நாடுகள் - சர்வதேச அளவில் 3 லட்சத்தை தாண்டியது நோய்த்தொற்று உள்ளோர் எண்ணிக்கை

Mar 22 2020 4:18PM
எழுத்தின் அளவு: அ + அ -
உலகளவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு, பலியானோர் எண்ணிக்கை 12 ஆயிரத்தை நெருங்குகிறது.

உலகம் முழுவதும் 186 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. சீனாவில், கொரோனா வைரசின் தாக்குதலால், 3 ஆயிரத்து 255 பேர் உயிரிழந்தனர். 81 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். இத்தாலியில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 32 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 47 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஈரானில் ஆயிரத்து 556 பேர் பலியாகினர். 20 ஆயிரத்து 610 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஸ்பெயினில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 326 ஆக உயர்ந்துள்ளது. 24 ஆயிரத்து 926 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஃபிரான்சில் 450 பேர் உயிரிழந்தனர். 12 ஆயிரத்து 612 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 276 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19 ஆயிரத்து 775 ஆக அதிகரித்துள்ளது. இங்கிலாந்தில் 177 பேர் பலியாகினர். 3 ஆயிரத்து 983 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்கொரியாவில் 102 பேரும், ஜெர்மனியில் 72 பேரும், நெதர்லாந்தில் 106 பேரும், சுவிட்சர்லாந்தில் 58 பேரும் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 838 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 84 ஆயிரமாக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 93 ஆயிரத்து 564 பேர், வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00