சர்வதேச அளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 14 ஆயிரத்து 688 ஆக அதிகரிப்பு - 3 லட்சத்து 38 ஆயிரத்து 944 பேர் பாதிப்பு

Mar 23 2020 11:19AM
எழுத்தின் அளவு: அ + அ -
சர்வதேச அளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 14 ஆயிரத்து 688 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 3 லட்சத்து 38 ஆயிரத்து 944 பேர் காய்ச்சலால் பாதிக்‍கப்பட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 14 ஆயிரத்து 688 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் பலி எண்ணிக்கை, 32 சதவீதம் உயர்ந்துள்ளது. வைசரால் இதுவரை ஆயிரத்து 756 பேர் பலியான நிலையில், 28 ஆயிரத்து 600-க்‍கும் மேற்பட்டோர் நோய் தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிரான்சில், பலி எண்ணிக்கை 562 ஆக உயர்ந்துள்ளது. 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றால் பாதிக்‍கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானம் மூலம், போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

அமெரிக்காவில், நியூயார்க், லாஸ் ஏஞ்சலஸ் போன்ற முக்கிய நகரங்கள் வைரஸ் முன்னெச்சரிக்‍கையாக முடக்கப்பட்டுள்ளன. அங்கும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நியூ ஜெர்சி நகரத்திலும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வீட்டை விட்டு வெளியேற முழு தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்‍காவில் 400 பேர் உயிரிழந்த நிலையில், 38 ஆயிரத்து 787 பேர் பாதிக்‍கப்பட்டுள்ளனர்.

ஈரானில் கொரோனா பாதிப்பால் நேற்று ஒரே நாளில் 129 பேர் உயிரிழந்துள்ளதால், பலி எண்ணிக்கை ஆயிரத்து 685-ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனாவால் 21 ஆயிரத்து 638 பேர் பாதிப்படைந்துள்ளனர். பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டுள்ளன. தொடர்ந்து கொரோனா பரவலைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இங்கிலாந்தில் 281 பேரும், நெதர்லாந்தில் 179​ பேரும், தென்கொரியாவில் 104 பேரும் உயிரிழந்துள்ளனர். இதேபோல், உலகின் பல்வேறு நாடுகளும் கொரோனா வைரஸ் தொற்றால் கடுமையாக பாதிக்‍கப்பட்டுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00