உலகளவில் கொரோனா வைரசால் உயிரிழந்‌தோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்தது - இத்தாலியில் ஒரே நாளில் 683 பேர் பலி

Mar 26 2020 3:35PM
எழுத்தின் அளவு: அ + அ -
உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்‌தவர்களின் எண்ணிக்கை, 21 ஆயிரத்து 283 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில், இத்தாலியில், 683 பேரும், ஸ்பெயினில், 656 பேரும் பலியாகியுள்ளனர்.

சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், பிரிட்டன், ஈரான், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 170-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. கொரோனா வைரசை பெரும் தொற்று நோயாக அறிவித்த உலக சுகாதார அமைப்பு, இது மனித குலத்திற்கான எதிரி என்றும் எச்சரித்தது. கொரோனா வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், நாளுக்கு நாள் பலி எண்ணிக்‌கை அதிகரித்து வருவதால், பாதிப்புக்குள்ளான நாடுகள் முடக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு, சர்வ‍தேச அளவில், இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 21 ஆயிரத்து 283 ஆக உயர்ந்துள்ளது.

அ‌திகபட்சமாக, இத்தாலியில், 7 ஆயிரத்து 503 பேரும், சீனாவில், 3 ஆயிரத்து 281 பேரும், ஸ்பெயினில் 3 ஆயிரத்து 647 பேரும், ஈரானில் 2 ஆயிரத்து 77 பேரும், பிரான்சில் ஆயிரத்து 331 பேரும், அமெரிக்காவில் 935 பேரும், ஜெர்மனியில் 206 பேரும், சுவிட்சர்லாந்தில் 153 பேரும், பிரிட்டனில் 465 பேரும், தென் கொரியாவில் 126 பேரும், நெதர்லாந்தில் 356 பேரும் பலியாகியுள்ளனர். ‍நேற்று ஒரே நாளில், இத்தாலியில், 683 பேரும், ஸ்பெயினில், 656 பேரும் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில், 4 லட்சத்து 71 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இத்தாலியில் நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 5 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 1 லட்ச‌த்து 13 ஆயிரத்து 812 பேர் குணமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00