ஈரானில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்‍காக 15 ஆயிரம் படுக்‍கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனைக்‍குத் திட்டம்

Mar 27 2020 1:41PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈரான் தலைநகர் டெஹ்ரானில், கொரோனா வைரஸ் சிகிச்சை அளிப்பதற்காக இரண்டாயிரம் படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனையை அந்நாட்டு ராணுவம் திறந்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளுக்‍கு நிகராக ஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இரண்டாயிரம் பேருக்‍கு மேல் உயிரிழந்துள்ள நிலையில், அந்நாட்டு ராணுவம் இந்த மருத்துவமனையைத் திறந்துள்ளது. டெஹ்ரானில் செயல்பட்டு வரும் சர்வதேச கண்காட்சியகக்‍ கட்டடத்தை மருத்துவமனையாக மாற்றி மூன்று பிரிவுகளாகப் பிரிக்‍கப்பட்டுள்ளது. இதில் இரண்டு பிரிவுகள் ஆண்களுக்‍கு எனவும், ஒரு பிரிவு பெண்களுக்‍கு எனவும் படுக்‍கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், அறுவை அரங்குகள், அவசரச் சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட பல தேவைகளுக்‍கும் தனித்தனி அறைகள் ஒதுக்‍கப்பட்டுள்ளன. இதேபோல், நாடு முழுவதும் சுமார் 15 ஆயிரம் படுக்‍கை வசதிகளுடன் கூடிய தற்காலிக மருத்துவமனைகள் திறக்‍கப்படும் என அந்நாட்டு ராணுவ உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00