அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது : நேற்று ஒரே நாளில் 16 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Mar 28 2020 3:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவில் வரும் ஜூன் மாதம் வரை கொரோனா பாதிப்பு குறைவதற்கு வாய்ப்பில்லை எனவும், அந்நாட்டில் 81 ஆயிரம் பேர் வரை உயிரிழக்கும் ஆபத்து நேரிடலாம் என்றும், வாஷிங்டன் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, சீனாவை விட அமெரிக்காவில் அதிகமாகியுள்ளது. கடந்த 3 மாதங்களாக கொரோனா வைரஸுடன் போராடி வரும் சீனாவில் சுமார் 81 ஆயிரம் பேர் கொரானாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அமெரிக்காவில் ஒரே மாதத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 85 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நியூயார்க் மாகாணம் முழுவதும் பாதிப்பு அதிகமாக உள்ளது. மொத்த நோய்த்தொற்றில் சரிபாதி நியூயார்க் மாகாணத்தில் பதிவாகியுள்ளது. இதனிடையே கொரோனா பாதிப்பு குறித்த ஆய்வு முடிவுகளை வாஷிங்டன் பல்கலைக்கழக சுகாதார மதிப்பீட்டுத்துறை தலைவர் க்ரிஸ்டோஃபர் முரே வெளியிட்டுள்ளார். இந்த ஆய்வு முடிவின்படி, அமெரிக்காவில் வரும் ஜூன் மாதம் வரை கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கும் என்றும், இந்த வைரசினால் 81 ஆயிரம் பேர் வரை உயிரிழக்கும் ஆபத்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தின் 2-வது வாரத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கும் என்றும், ஜூலை மாதம் வரை உயிரிழப்புகள் தொடரலாம் எனவும் இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00