கொரோனாவால் பாதிக்‍கப்பட்டோர் பட்டியலில் சீனாவை பின்னுக்‍கு தள்ளியது இத்தாலி : 87 ஆயிரம் பேருக்‍கு கொரோனா தொற்று உறுதி - நேற்று மட்டும் 919 பேர் பலி

Mar 28 2020 10:09AM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகளவில், கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 27 ஆயிரத்து 251 ஆக உயர்ந்துள்ளது. இத்தாலியில் ஒரே நாளில், 919 பேர் பலியாகியுள்ளனர். ஸ்பெயினில் 773 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரசால் இத்தாலியில் 9 ஆயிரத்து 134 பேரும், சீனாவில், 3 ஆயிரத்து 292 பேரும், ஸ்பெயினில் 5 ஆயிரத்து 138 பேரும், ஈரானில் 2 ஆயிரத்து 378 பேரும், அமெரிக்காவில் ஆயிரத்து 590 பேரும், பிரான்ஸில் ஆயிரத்து 995 பேரும், பிரிட்டனில் 759 பேரும், நெதர்லாந்தில் 546 பேரும், ஜெர்மனியில் 342 பேரும், பெல்ஜியத்தில் 289 பேரும் பலியாகியுள்ளனர். இத்தாலியில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 919 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினில் 773 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் சுமார் 16 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அந்நாட்டில் இதுவரை பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. மேலும், கொரோனாவால் பாதிக்‍கப்பட்டோர் பட்டியலில் சீனாவை பின்னுக்‍கு தள்ளி இத்தாலி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. அந்நாட்டில் சுமார் 87 ஆயிரம் பேருக்‍கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகளவில், 5 லட்சத்து 94 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 1 லட்ச‌த்து 32 ஆயிரத்து 526 பேர் குணமடைந்துள்ளதாகவும், தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00