ஸ்பெயின், செக்‍ குடியரசு நாடுகளுக்‍கு சீனா அனுப்பிய கொரோனா தடுப்பு உபகரணங்கள் தவறானவையா? : சர்வதேச அளவில் எழுந்த புதிய சர்ச்சை

Mar 28 2020 10:19AM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவிலிருந்து ஸ்பெயின் மற்றும் செக் ‍குடியரசு நாடுகளுக்‍கு அனுப்பப்பட்ட கொரோனா சோதனை சாதனங்களில், பெரும்பாலானவை தவறான முடிவுகளை காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இம்மாத தொடக்கத்தில், செக் குடியரசிற்கு, சீனா, ஒரு லட்சத்து 50 ஆயிரம், கொரோனா வைரஸ் சோதனை சாதனங்களை அனுப்பியது. இந்த சோதனை Kit-களில் 80 சதவீத சாதனங்கள், சரியானவை அல்ல என்றும், தவறான முடிவுகளை தருவதாகவும் அந்நாடு குற்றம் சாட்டியுள்ளது. இந்த சாதனங்களை சுமார் 6 லட்சம் டாலர்கள் செலவில் சீனாவிடம் இருந்து வாங்கியதாக தெரிவித்துள்ள செக்‍குடியரசு, சோதனை Kit-களை திருப்பி அனுப்ப உள்ளதாக கூறியுள்ளது. இதனிடையே, கொரோனாவால் 4 ஆயிரத்துக்‍கும் அதிகமான இறப்புகளை சந்தித்துள்ள ஸ்பெயின் நாடும் சீனா மீது குற்றம் சாட்டியுள்ளது. சீனாவிடமிருந்து பெறப்பட்ட சாதனங்கள் தவறான முடிவுகளை காண்பிப்பதாகவும், எனவே, அவற்றை சீனாவிற்கே திருப்பி அனுப்ப உள்ளதாகவும் ஸ்பெயின் தெரிவித்துள்ளது. ஸ்பெயின் மற்றும் செக் ‍குடியரசு நாடுகளுக்‍கு, தவறான சோதனை சாதனங்களை, சீனா வேண்டுமென்றே அனுப்பியதா என சர்வதேச அளவில் சர்ச்சை எழுந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00