கொரோனா வைரஸ் பரவல், பாதிக்‍கப்பட்டவர்களை மீட்பது குறித்து சீன - அமெரிக்‍க அதிபர்கள் தொலைபேசியில் ஆலோசனை

Mar 28 2020 10:53AM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு வர, அமெரிக்‍காவுக்‍கு, இயன்ற அளவு, எவ்வித உதவியையும் அளிக்‍கத் தயார் என, சீனா அறிவித்துள்ளது.

கோவிட் 19 என்ற வைரஸ் தொற்று, சீனாவின் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் உருவாகி இன்று உலகளவில் மிகப்பெரிய எண்ணிக்‍கையிலான உயிரிழப்பு‍களை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், நோயைக் குணமாக்‍குவது எப்படி என்பது குறித்தே உலக சுகாதார அமைப்பும், பிற நாடுகளும் கவலைப்பட்டுக் ‍கொண்டிருக்‍கின்றன. ஆனால், கொரோனா வைரஸ் பரவுவதை செயல்திறனுடன் தடுக்‍க முடியாத அமெரிக்‍க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வைரஸ் பரவல் மற்றும் பாதிக்‍கப்பட்டோரைக் காக்‍கும் வழிகளில் கவனம் செலுத்தியதற்கு சமமாக, சீனாவை வசைபாடுவதில் கவனம் செலுத்தினார். உலக சுகாதார அமைப்பால்​ கோவிட் 19 எனப் பெயரிடப்பட்ட இந்த வைரஸை, சீனா வைரஸ் என டொனால்ட் ட்ரம்ப் அழைக்‍கத் தொடங்கியதோடு மட்டுமல்லாமல், சீனாவுக்‍கு எதிரான கருத்துக்‍களையும் தெரிவித்து வந்தார். இந்நிலையில், யாரும் எதிர்பாராதவிதமாக சீன அதிபரைத் தொடர்பு கொண்டு பேசிய டொனால்ட் ட்ரம்ப், கோவிட் 19 வைரஸ் குறித்து ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து பின்னர் பேசிய சீன அதிபர் ஜின் ஜிங்பிங், தற்போதை நிலையில் சீன அமெரிக்‍க உறவுகள் ஒரு இறுக்‍கமான நிலையில் இருப்பதாகவும், இரு நாடுகளின் கூட்டுறவு நடவடிக்‍கைகளே உறவுகள் மேம்பட உதவும் என்றும் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00