கொரோனாவால் அமெரிக்காவில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் பலி ஆகலாம் என்ற அதிர்ச்சி தகவலால் அமெரிக்கர்கள் பீதி

Mar 31 2020 10:45AM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனாவால் அமெரிக்காவில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் பலி ஆகலாம் என்ற அதிர்ச்சி தகவலால் அமெரிக்கர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அமெரிக்காவில் வேகமாக பரவி வருகிறது. இதனிடையே உலகின் கொரோனா தொற்று மையமாக மாறியுள்ள அமெரிக்காவில் விரைவில் 2 லட்சம் பேர் வரை பலியாகலாம் என வெள்ளை மாளிகையின் மூத்த தொற்று நோய் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்ல இது குறித்து தெரிவித்துள்ள அமெரிக்காவின் தேசிய அலர்ஜி மற்றும் தொற்று நோய் இயல் நிபுணர் அந்தோநி பாவூசி வெண்டிலேட்டர், ஹாஸ்மட் பாதுகாப்பு உடைகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களின் பற்றாகுறை மற்றும் மருத்துவர்களின் பற்றாகுறை ஆகியவற்றால் அமெரிக்காவில் 10 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு நோய் தொற்று ஏற்படலாம் என்றும் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் பலியாகலாம் என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் 2 லட்சம் பேர் வரை உயிரிழப்பார்கள் என்று தான் கூறிய கருத்தை திரும்ப பெறுவதாகவும் அதே நேரத்தில் 10 லட்சம் பேர் வரை பாதிக்கப்படலாம் என்றும் கூறியுள்ளார். இதனால் அமெரிக்கர்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் கொரோனா தொற்று மையமாக உள்ள நியூயார் நகரை வூகான் நகரை போல லாக் டவுன் செய்வதில் அமெரிக்கா தயக்கம் காட்டி வருகிறது. இதனால் நோய் தொற்று நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில், சீனா கையாண்டதை போல ஒரு கடுமையான நடவடிக்கையை அமெரிக்க அரசு கையில் எடுக்க வில்லை என்றால் விரைவில் பெரும் விளைவுகளை அந்நாடு சந்திக்க வேண்டி வரும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00