அமெரிக்‍காவில் கொரோனா பெருந்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்‍கை 4 ஆயிரத்தை கடந்தது - அமெரிக்‍கா, வாழ்வா? சாவா? என்ற நிலையில் உள்ளதாக அதிபர் ட்ரம்ப் கவலை

Apr 1 2020 3:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா தொற்றால், அமெரிக்‍கா, வாழ்வா? சாவா? என்ற நிலையில் இருப்பதாக அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்‍காவில், கொரோனா வைரசுக்‍கு பலியானவர்களின் எண்ணிக்‍கை 4 ஆயிரத்தை கடந்துள்ளது. சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் கொரோனா வைரசால் பாதிக்‍கப்பட்டுள்ளனர். இந்நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் ட்ரம்ப், அடுத்த 30 நாட்கள் அமெரிக்‍காவுக்‍கு மிகுந்த சவாலான காலகட்டம் என்று தெரிவித்தார். கொரோனா தொற்றால், அமெரிக்‍கா, வாழ்வா சாவா என்ற நிலையில் இருப்பதாகவும், நம் எதிர்காலம் நம் கையில்தான் இருப்பதாகவும் கூறினார். அமெரிக்‍க அரசின் முதல் நோக்கம் மக்களின் உயிரை காப்பதுதான் என்றும், அடுத்ததுதான் பொருளாதாரம் என்றும் தெரிவித்தார். நமது தியாகமும், நமது செயல்களுமே கொரோனா வைரசின் தலையெழுத்தையும், அதற்கு எதிரான நமது வெற்றியையும் நிர்ணயிக்கும் என்று கூறினார். அமெரிக்‍க மக்‍கள், சமூக விலகலை தீவிரமாக கடைபிடிக்‍க வேண்டும் என்றும் ட்ரம்ப் கேட்டுக்‍கொண்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00