இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் கொரோனா மிகவும் சவாலான நெருக்‍கடி - ஐ.நா. பொதுச் செயலாளர் கருத்து

Apr 1 2020 3:42PM
எழுத்தின் அளவு: அ + அ -

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் மிகவும் சவாலான நெருக்கடியாக கொரோனா தொற்று உள்ளதாக, ஐ.நா. பொதுச்செயலாளர் திரு.அன்டோனியோ கட்ரஸ் தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் செய்தியாளர்களை சந்தித்த ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ கட்ரஸ், ஐக்கிய நாடுகள் சபையின் 75 ஆண்டு கால வரலாற்றில் இது போல ஒரு உலக சுகாதார நெருக்கடியை எதிர்கொண்டதில்லை எனக்‍கூறினார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மிகவும் சவாலான சுகாதார நெருக்கடியாக கொரோனா தொற்று உள்ளதாக தெரிவித்தார்.

மிக மோசமான உலக நெருக்கடியாக, ஏன் கொரோனா தொற்றை கருதுகிறீர்கள் என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த கட்ரஸ், ஒருபுறம் உலக மக்கள் அனைவரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருப்பதாகவும், மற்றொரு புறம், பொருளாதார தேக்‍கம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார். கொரோனா பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டு வர உடனடியாக ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை என்றும் வலியுறுத்தினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00