உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 12 லட்சத்தை தாண்டியது - கொரோனா தாக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 70 ஆயிரத்தை நெருங்குகிறது

Apr 6 2020 12:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 70 ஆயிரத்தை நெருங்குகிறது.

கொரோனா வைரசால், அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளி‌ட்ட நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், நாளுக்கு நாள் பாதிப்பும், பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருவது உலக மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. சர்வதேச அளவில் இதுவரை, 12 லட்சத்து 71 ஆயிரத்து 999 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 69 ஆயிரத்து 405 பேர் பலியாகியுள்ளனர்.

அமெரிக்காவில் 3 லட்சத்து 36 ஆயிரம் பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் 9 ஆயிரத்து 605 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினில், 1 லட்சத்து 31 ஆயிரத்து 759 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 12 ஆயிரத்து 641 பேர் மரணமடைந்துள்ளனர். இத்தாலியில், 1 லட்சத்து 28 ஆயிரத்து 948 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 15 ஆயிரத்து 887 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரான்சில், 8 ஆயிரத்து 078 பேரும், பிரிட்டனில், 4 ஆயிரத்து 934 பேரும், சீனாவில், 3 ஆயிரத்து 329 பேரும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 2 லட்சத்து 61 ஆயிரத்து 424 பேர் குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00