அமெரிக்காவை திணறடிக்‍கும் கொரோனா வைரசுக்‍கு 3 லட்சத்து 36 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு - பலி எண்ணிக்கை 9,600-ஐ தாண்டியது

Apr 6 2020 11:00AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்து 32 ஆயிரத்தை தாண்டி விட்ட நிலையில், பலி எண்ணிக்கை 9 ஆயிரத்து 500-ஐ கடந்து விட்டது.

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றுக்‍கு அதிகம் பாதிக்‍கப்பட்டோர் வரிசையில் அமெரிக்‍கா முதலிடம் வகிக்‍கிறது. நாளுக்‍கு நாள் கொரோனா வைரசின் தாக்‍கம் அதிகரித்துக்‍ கொண்டடே வருவதால், அதிபர் டிரம்ப் அரசு செய்வதறியாது திணறி வருகிறது. இதுவரை அந்நாட்டின் வைரஸ் தொற்றால் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 3 லட்சத்து 32 ஆயிரத்து 500-ஐ தாண்டியுள்ளது. பலியானோர் எண்ணிக்‍கையும் வேகமாக உயர்ந்து, 9 ஆயிரத்து 500-ஐ கடந்துவிட்டது. கொரோனாவுக்கு மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாகாணமான நியூயார்க்கில் மூவாயிரத்து 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அடுத்த 2 வாரங்களில் பலி எண்ணிக்கை மிக மோசமானதாக இருக்கும் என அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் 40 மாகாணங்களில் பேரிடர் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதனால், 33 கோடி அமெரிக்கர்களில் 90 சதவீதம் பேர் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். முக்‍கிய நகரங்களான நியூயார்க், நியூஜெர்சி, கனெக்டிகட் ஆகியவை கொரோனா பரவலின் மையமாக உள்ளன. இங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் பலியாகின்றனர். கொரோனா வீரியம் அதிகரித்துக்‍ கொண்டே செல்வதால், அந்நாட்டு மக்‍கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00