கோடை வெப்பத்தால் கொரோனா அழிந்து விடாது - வதந்திகளை நம்ப வேண்டாம் என உலக சுகாதார நிறுவனம் கருத்து

Apr 6 2020 3:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா வைரசை கோடையின் கடும் வெப்பம் அழித்து விடும் என‍ நிலவும் கருத்து வெறும் வதந்தி என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்திற்கு இடையே கடும் கோடை காலம் துவங்குவது குறித்து பல்வேறு தரப்பினரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். கடும் வெப்பநிலை கொரோனா வைரசை கொல்லும் என்று தகவல் பரவி வருகிறது. இந்நிலையில், கோடையின் கடும் வெப்பம், கொரோனா வைரசை கொல்லும் எனக்‍ கூறப்படுவது வெறும் வதந்தி என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 25 டிகிரி செல்சியசுக்கு அதிகமான வெப்பநிலை இருந்தாலும் கொரோனா வைரஸ் அழியாது என்றும், வானிலை எப்படி இருந்தாலும், கொரோனா தொற்று ஏற்படலாம் என்றும், கடும் வெப்ப வானிலை கொண்ட நாடுகளில் கூட கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் விளக்‍கம் அளித்துள்ளது. கைகளை அடிக்கடி கழுவி முழுமையாக சுத்தம் செய்வதை உறுதி செய்யுங்கள் என்றும், கண்கள், வாய் மற்றும் மூக்கைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் மக்‍களுக்‍கு உலக சுகாதரா நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00