அமெரிக்காவில் போலீசாரின் தாக்குதலில் கருப்பினத்தவர் உயிரிழப்பு : 4 காவலர்களை பதவி நீக்கம் செய்து மேயர் அதிரடி உத்தரவு

May 27 2020 1:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவில் கருப்பினத்தவரின் உயிரிழப்புக்குக் காரணமான நான்கு காவலர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தின் மினியபொலிஸ் நகரில் கடந்த சில தினங்களுக்கு முன் கருப்பினத்தவர் ஒருவர் மற்றொருவரை ஏமாற்ற முயன்றதாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற நான்கு காவலர்கள், அந்த கருப்பின மனிதரைப் பிடித்து காவல் துறை வண்டியில் ஏற்ற முயன்றனர். அப்போது ஏற்பட்ட தகராறில் கருப்பினத்தவரின் கழுத்தில் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. காவலர்களில் ஒருவர் கால் முட்டியைக் கொண்டு, கருப்பினத்தவரைத் தாக்கியதாகவும், அப்போது அங்கிருந்த மற்றொருவர் அது தொடர்பான காட்சிகளை செல்போனில் படம் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் மயக்கமடைந்த கருப்பினத்தவர் மருத்துவமனையில உயிரிழந்தார். இதையடுத்து அங்கு கூடிய ஏராளமான கருப்பின மக்கள், நீதி கேட்டுப் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய நான்கு காவலர்களை பதவி நீக்கம் செய்து மின்னபொலிஸ் மேயர் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவில் கருப்பினத்தவர்களின் மீது போலீசார் அடிக்கடி தாக்குதல் நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00