G7 உச்சி மாநாட்டிற்கு இந்தியா, தென்கொரியா, நாடுகளை அழைக்‍க திட்டம் - சீனாவை சமாளிக்‍க ட்ரம்ப் ​அதிரடி

May 31 2020 2:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜூன் மாத இறுதியில் நடைபெறவிருந்த G7 உச்சி மாநாட்டை செப்டம்பர் வரை ஒத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்த முறை, இந்தியா, ரஷ்யா, தென்கொரியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளையும் இம்மாநாட்ற்கு அழைக்க விரும்புவதாகவும், ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

G7 என்பது உலகின் முன்னேறிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளின் அமைப்பாகும். இதில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இடம் பெற்றிருக்கின்றன. ஜூன் மாத இறுதியில் நடைபெறவிருந்த G7 உச்சி மாநாட்டை, செப்டம்பர் மாதம் வரை ஒத்தி வைப்பதாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இம்முறை, G7 மாநாட்டில் பங்கேற்க இந்தியா, ரஷ்யா, தென் கொரியா, மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளையும் அழைக்கவுள்ளதாக தெரிவித்த அவர், தற்போதுள்ள நாடுகள், உலகில் நடப்பதை சரியாக பிரதிபலிக்காமல் காலாவதி ஆகிவிட்டதாக தெரிவித்தார். சீனாவை எதிர்காலத்தில் எப்படி கையாள்வது என்பது குறித்து ஆலோசிக்கவும், நட்பு நாடுகளை ஒன்றிணைக்கவும், ட்ரம்ப் திடமிட்டுள்ளதாக, வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00