ஜப்பானில் புதிதாக 34 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று : சிவப்பு வண்ண விளக்குகளில் ஒளிர்ந்த டோக்கியோ வானவில் பாலம்

Jun 3 2020 12:52PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா வைரஸ் அச்சம் மீண்டும் உருவாகியிருப்பதைக் குறிக்கும் வகையில், டோக்கியோவின் புகழ்பெற்ற வானவில் பாலத்தில் சிவப்பு வண்ண விளக்குகள் ஒளிரவிடப்பட்டன.

புதிதாக 34 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மீண்டும் பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும், சமூக இடைவெளியைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து அனைவருக்கும் நினைவுபடுத்தும் வகையில், டோக்கியோவில் உள்ள வானவில் பாலம் சிவப்பு வண்ணத்தில் ஒளிரவிடப்பட்டது. உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள ஜப்பான், கொரோனா வைரஸ் ஊரடங்கு விதிகளை கடந்த வாரம் முழுமையாக நீக்கியது. நாடு முழுவதும் 17 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் 898 பேர் உயிரிழந்தனர். பெரிய பாதிப்புக்களில் இருந்து தப்பினாலும், ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த மாதம் 9ம் தேதிக்குப் பின் அதிக எண்ணிக்கையிலானோர் டோக்கியோவில் மட்டும் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00