கொரோனா தொற்றை குணப்படுத்தும் விவகாரம் - ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பரிசோதனையை மீண்டும் தொடர உலக சுகாதார அமைப்பு முடிவு

Jun 4 2020 12:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா தொற்றை குணப்படுத்தும் விவகாரத்தில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பரிசோதனையை மீண்டும் தொடங்குவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை மலேரியா சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதிலும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து சிறப்பாக செயல்படுவதாக தகவல் பரவியது. அதேவேளையில், இதனை பயன்படுத்துவதால், இருதய நோய் பாதிப்பு வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து, ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பரிசோதனையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.

இந்நிலையில், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பரிசோதனையை மீண்டும் தொடங்குவதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. கொரோனாவை குணப்படுத்தும் மருந்து தற்போதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், உறுதியான பதில் கிடைக்கும் வரை ஏற்கனவே நடைபெற்று வரும் பரிசோதனைகளை தொடர முடிவு செய்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் மூத்த அறிவியல் விஞ்ஞானி சௌமியா சாமிநாதன் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00