அமெரிக்காவில் George Floyd கொல்லப்பட்டதை கண்டித்து லண்டனில் பேரணி - இனவெறி தாக்குதலுக்கு உலக தலைவர்கள் கடும் கண்டனம்

Jun 4 2020 12:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

இனவெறி தாக்குதல் காரணமாக George Floyd கொல்லப்பட்டதை கண்டித்து லண்டனில் ஏராளமானோர் பேரணி சென்றனர்.

George Floyd இறப்பை தொடர்ந்து அமெரிக்காவில் பெரியளவிலான போராட்டங்கள் வெடித்துள்ளன. இதன் தொடர்ச்சியாக, பிரிட்டன் தலைநகர் லண்டனிலும் இனவெறி தாக்குதலுக்கு எதிரான எதிர்ப்பு அலைகள் பரவித் தொடங்கியுள்ளன. இனவெறி தாக்குதலுக்கு நீதி கேட்டு ஏராளமானோர் லண்டன் நகரில் பேரணி சென்றனர்.

இதற்கிடையே, George Floyd இறப்பு குறித்து கருத்து தெரிவித்த போப் பிரான்சிஸ், இனவெறி தாக்குதல்களை கண்களை மூடிக்கொண்டு சகித்துக்கொண்டிருக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

இதேபோல், செய்தியாளர்களிடம் உரையாடிய பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன், George Floydயின் இறப்பு குறித்து அறிந்து திகைத்துப் போனதாகவும், சமூகத்தில் இனவெறிக்கு இடமில்லை என்பதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு தெரிவித்துக்கொள்வதாகவும் கூறினார்.

அமெரிக்காவில் என்ன நடக்கிறது என்பதை அனைவரும் திகிலுடனும், கலக்கத்துடனும் பார்ப்பதாக தெரிவித்துள்ள கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே, மக்களை ஒன்றிணைக்கும் மற்றும் மக்களின் குரலை கேட்க வேண்டிய நேரம் இது என்றும் கருப்பின மக்களுக்கு அநீதிகள் தொடர்கின்றன என்பதை அறிய வேண்டிய நேரம் இது என்றும் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00