இனவெறி தாக்குதலுக்கு எதிராக அமெரிக்காவில் தீவிரமடையும் போராட்டம் - ராணுவத்தை பயன்படுத்தும் அதிபர் ட்ரம்ப்பின் முடிவுக்கு பாதுகாப்பு செயலாளர் எதிர்ப்பு

Jun 4 2020 12:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

இனவெறிக்கு எதிராக நடைபெற்றுவரும் போராட்டத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ராணுவத்தை ஈடுபடுத்தப்போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியதற்கு அந்நாட்டு பாதுகாப்பு செயலாளர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் மின்னியாபொலிஸ் நகரில், ஜார்ஜ் பிளாய்டு என்ற கறுப்பின இளைஞரை, சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்த போலீஸ் அதிகாரி ஒருவர், அவரை தரையில் தள்ளி கழுத்தை காலால் நசுக்கினார். இதில், ஜார்ஜ் ஃப்ளாய்ட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசாரின் இந்த அத்துமீறலைக் கண்டித்து அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் நடந்துவருகின்றன. இந்நிலையில், போராட்டத்தை கட்டுப்படுத்த கிளர்ச்சி சட்டம் மூலம் ராணுவத்தை ஈடுபடுத்தப்போவதாக அதிபர் ட்ரம்ப் கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அந்நாட்டு பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பர், இச்சட்டம் முக்கிய நேரங்களில் மட்டுமே செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் தற்போது அத்தகைய சூழல் நிலவவில்லை என்றும் கூறியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00