ஜி.7- மாநாட்டுக்‍கு இந்தியாவுக்‍கு அமெரிக்‍கா அழைப்பு - சீனா கடும் கண்டனம்

Jun 4 2020 1:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவை ஜி-7 மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சீனா, ஒரு சிறிய கூட்டம் தங்களுக்‍கு எதிராக செயல்பட முடியாது கொக்‍கரித்துள்ளது.

ஜி-7 அமைப்பில் மிகப் பெரிய பொருளாதாரத்தை கொண்ட வளர்ச்சி அடைந்த நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா, பிரிட்டன், கனடா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த நாடுகளின் அதிபர்கள், தலைவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை ஒன்றுகூடி ஆலோசனை நடத்தி, பொருளாதாரம், வர்த்தகம், உள்ளிட்ட வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆலோசிப்பார்கள்.

இந்நிலையில், கொரோனா விவகாரம் தொடர்பாக உலக அளவில் சீனாவை தனிமைப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டுள்ள அமெரிக்‍கா, அதற்காக ஜி7 மாநாட்டை பயன்படுத்த முடிவு செய்துள்ளது. இதனையடுத்து, மாநாட்டில் பங்கேற்குமாறு பிரதமர் திரு. நரேந்திர மோதிக்கு, அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். இந்தியாவும் இந்த இந்த அழைப்பை ஏற்றது, சீனாவிற்கும் பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது.

இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் Zhao Lijian கூறுகையில், உலக அளவில் சீனாவை தனிமைப்படுத்த அமெரிக்கா முயன்று வருவதாகவும், அந்தத் திட்டம் பலிக்காது எனவும் தெரிவித்துள்ளார். ஜி7 நாடுகள் என்பது உலகின் அமைதி குறித்து சிந்திக்க வேண்டும் என்று கூறிய அவர், ஒரு சிறிய கூட்டம் சீனாவிற்கு எதிராக செயல்பட முடியாது என குறிப்பிட்டுள்ளார். சீனாவிற்கு எதிராக இப்படி சிறிய வட்டத்தை உருவாக்குவது தோல்வியில்தான் முடியும் என்றும், அப்படிப்பட்ட வட்டம் பெரிய அளவில் வரவேற்பை பெற வாய்ப்பில்லை எனவும் Zhao Lijian கூறியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00