அமெரிக்காவில் போலீசார் தாக்குதலில் உயிரிழந்த George Floydக்கு கொரோனா தொற்று- பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்

Jun 5 2020 12:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்க போலீசரால் கொல்லப்பட்ட கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்டு, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில், மினியாபொலிசில், ஜார்ஜ் பிளாய்டு என்ற ஆப்ரிக்க அமெரிக்கரை, டெரிக் சாவின் என்ற காவல்துறை அதிகாரி , சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தினார். அப்போது, பிளாய்டை தரையில் தள்ளி, அவரின் கழுத்தில், தன் கால் முட்டியால் அழுத்தியதில் ஜார்ஜ் பிளாய்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை கண்டித்து அமெரிக்கா முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஹென்னெபின் கவுண்டி மருத்துவ பரிசோதனை அலுவலகம், ஜார்ஜ் பிளாய்டின் 20 பக்க பிரேத பரிசோதனை அறிக்கையை, குடும்ப உறுப்பினர்களின் அனுமதியுடன் வெளியிட்டுள்ளது. அதில் பிளாய்டு கழுத்தில் காலை வைத்து அழுத்திய போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அவரது இறப்பு கொலை என்றும் தெரிவித்துள்ளது. மேலும், ஜார்ஜ் பிளாய்டு அறிகுறி எதுவுமின்றி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00