ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்ட்டில் கொக்கோ பயிரிடுவதற்கு வனப்பகுதிகள் அழிக்கப்படுவதைத் தடுக்க புதிய நடவடிக்கை

Jun 5 2020 5:13PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்ட்டில் கொக்கோ பயிரிடுவதற்காக ஏராளமான வனப்பகுதிகள் அழிக்கப்படுவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

உலகில் சுற்றுச்சூழல் மாசடைவதற்கு, காடுகள் அழிக்கப்படுவதும் பெரிய காரணமாக அமைந்துள்ளது. தென்னமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய காடுகள் சுற்றுச்சூழலைக் காக்கும் பெரும் காரணிகளாக விளங்கும் நிலையில், வணிக ரீதியான காரணங்களுக்காக அவற்றை அழிக்கும் பணிகளும் நடந்துவருகின்றன. ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்ட்டில் சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ஹெக்டேர் பரப்பிலான அடர் காடுகளின் உள்பகுதியில் கொக்கோ போன்ற பணப்பயிர்களை வளர்ப்பதற்காக ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இந்நிலையில், வனப்பரப்பை அதிகரிக்க அந்நாட்டு அரசு பல்வேறு புதிய திட்டங்களை வகுத்துள்ளது. 2030ம் ஆண்டிற்குள் 20 சதவிகித காடுகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது. மேலும், காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக நடைபெறும் குற்றச்செயல்களைத் தடுத்தல், அங்கு வசிக்கும் பொதுமக்கள் பொருளாதார ரீதியாக முன்னேற உதவுதல் என புதிய நடவடிக்கைகளும் தொடங்கப்படவுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00