இணையதளங்களில் மூழ்கி கிடக்கும் இளைஞர்கள் : பெற்றோர் விழிப்புணர்வுடன் இருக்க வலியுறுத்தி நியூசிலாந்து அரசு தயாரித்த விழிப்புணர்வு விளம்பரம்

Jun 27 2020 10:32AM
எழுத்தின் அளவு: அ + அ -
சிறுவர்களுக்கு இணைய பாதுகாப்பை எடுத்துரைக்கும் வகையில் நியூசிலாந்தில் வெளியிடப்பட்டுள்ள விளம்பரம் ஒன்று அனைவரது பாராட்டையும் குவித்து வருகிறது.

பதின்ம வயது சிறுவர்கள் ஆபாச படங்களை பார்த்து சீரழிவதை தடுக்க உலக நாடுகள் பல வழிகளை கையாண்டு வருகின்றன. அந்த வகையில் நியூசிலாந்து நாட்டின் அரசு, அந்நாட்டின் அரசு தொலைக்காட்சியில் நூதன பிரசாரத்தை தொடங்கியுள்ளது. இதன்மூலம் ஆபாச இணையதளங்களில் மூழ்கி கிடக்கும் சிறுவர்களை மீட்க முடியும் என்றும், பெற்றோர் விழிப்புணர்வுடன் இருக்கவும் வலியுறுத்தி உள்ளது. விளம்பரத்தில் இரண்டு ஆபாசப் பட நடிகர்கள் ஒரு வீட்டின் காலிங் பெல்லை அழுத்துகின்றனர். வீட்டில் இருக்கும் தாய், கதவைத் திறக்கிறார். அப்போது தாங்கள் யார் என்பதை அறிமுகம் செய்து கொள்ளும் நடிகர்கள், வீட்டில் இருக்கும் சிறுவன் தங்களின் படங்களைப் பார்த்து உறவு முறை குறித்து தவறான புரிதலைக் கொண்டுள்ளான் என்றும் விவரிக்கின்றனர். இந்த நேரத்தில் லாப்டாப்போடு வெளியேவரும் வீட்டுச் சிறுவன், அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போகிறான். இப்படி கலகலப்பாக முடியும் அந்த வீடியோ, சொல்ல வந்த விஷயத்தையும் முறையாக சொல்லிவிட்டுச் செல்கிறது. 10 நாட்களுக்கு முன்னர் பகிரப்பட்ட இந்த வீடியோவானது, பல லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளன. யூ-டியூபில் மட்டும் இந்த விளம்பரத்துக்கு 20 லட்சம் பார்வைகள் குவிந்துள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00