நிலவில் இயங்கும் கழிவறையை வடிவமைத்து தருபவர்களுக்கு ரூ.26 லட்சம் பரிசுத்தொகை : அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அறிவிப்பு

Jun 29 2020 12:39PM
எழுத்தின் அளவு: அ + அ -
நிலவில் இயங்கும் கழிவறையை வடிவமைத்து தருபவர்களுக்கு 26 லட்ச ரூபாய் சண்மானமாக வழங்கப்படும் என நாசா அறிவித்துள்ளது.

விண்வெளி தொடர்பான உண்மைகளை கண்டறியும் நோக்கத்தோடு பல நாடுகளை சேர்ந்தவர்கள் விண்வெளியில் மையம் அமைத்து பல ஆண்டுகளாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு ஆராய்ச்சியில் ஈடுபடும் விண்வெளி வீரர்களுக்கு தங்குமிடம், கழிப்பறை போன்ற வசதிகளை விண்வெளியில் அமைப்பது மிகவும் கடினமான பணியாகவே இருந்து வருகிறது. புவி ஈர்ப்பு விசை இல்லாத காரணத்தால் விண்வெளி வீரர்களில் உடையுடன் இணைந்தவாறே டைப்பர் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதற்காக அதிக செலவுகள் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையில், அமெரிக்க விண்வெளி மையமான நாசா வரும் 2024 ஆம் ஆண்டு நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது. மேலும், விண்வெளி மற்றும் நிலவு தொடர்பான ஆராய்ச்சிகளையும் தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில், சந்திரனின் ஈர்ப்புவிசையில், நுண்ணிய ஈர்ப்பு விசையிலும் இயங்கக்கூடிய கழிவறையை வடிவமைத்து தருபவர்களுக்கு இந்திய மதிப்பில் 26 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என நாசா தெரிவித்துள்ளது. இந்த சவாலில் உலகில் உள்ள அனைவரும் பங்கேற்கலாம் எனவும், திட்டத்தின் மாதிரி வரும் ஆகஸ்ட் 17 ஆம் தேதிக்குள் கிடைக்க வேண்டும் எனவும் நாசா கேட்டுக்கொண்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00