வடக்கு சீனாவின் Tangshan நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டதால், பொதுமக்கள் அச்சம்

Jul 12 2020 6:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

வடக்கு சீனாவின் Hebei மாகாணத்தில் உள்ள Tangshan நகரில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால், கட்டடங்கள் அதிர்ந்தன.

Hebei மாகாணம் Guye மாவட்டத்தில் உள்ள Tangshan நகரில் இன்று காலை பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 புள்ளி ஒன்றாக பதிவானது. சுமார் 5 விநாடிகள் நீடித்த இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் அதிர்ந்தன. வீடுகளின் உட்புறத்தில் விரிசல் ஏற்பட்டது. அலமாறிகளில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் தரையில் சிதறி விழுந்தன. சில பகுதிகளில் மின்சாரமும், தண்ணீர் விநியோகமும் பாதிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிகமாக ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இந்த நிலநடுக்கம் சீன தலைநகரான பெய்ஜிங் நகரிலும் டியான்ஜின் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் உணரப்பட்டது. டங்ஷான் நகரில் கடந்த 1976ம் ஆண்டு ஜூலை மாதம் 28ம் தேதி 7 புள்ளி எட்டு அளவுக்கு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டு, 2 லட்சத்து 42 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

இதனிடையே, தென்மேற்கு சீனாவில் சிச்சுவான் மாகாணத்தில் Aba கவுன்ட்டியில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சாலை அரிக்கப்பட்டு, மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. உடனடியாக தற்காலிக சாலை அமைக்கப்பட்டு, ஒருவழிப்பாதை போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டது.

சிச்சுவான் மாகாணத்தில் அமைந்துள்ள நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, குவாங்சி மாகாணத்தில் Liuzhou நகரம் வெள்ளத்தில் மிதப்பதால், வெளியேற முடியாமல் சிக்கித் தவிக்கும் மக்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். இதேபோன்று ஜியாங்சி மாகாணத்தில் Jiujiang நகரில் உள்ள பிரம்மாண்ட ஏரியில் விரிசல் ஏற்பட்டு, வெள்ளமென நீர் வெளியேறுகிறது. சீனாவின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக, லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00