அமெரிக்‍காவின் ஃபுளோரிடாவில் அமைந்துள்ள டிஸ்னி பூங்கா மீண்டும் திறப்பு - பார்வையாளர்கள் மகிழ்ச்சி

Jul 12 2020 2:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, நான்கு மாதங்களாக மூடப்பட்டிருந்த டிஸ்னி பொழுதுபோக்கு பூங்கா பொதுமக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது.

உலகின் பெரிய பொழுதுபோக்கு பூங்காவான வால்ட் டிஸ்னி பூங்கா அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணம் Orlando நகரில் அமைந்துள்ளது. அமெரிக்காவில் சுற்றுலா மேற்கொள்பவர்கள் இந்த பொழுதுபோக்கு பூங்காவை பார்க்காமல் திரும்ப விரும்பமாட்டார்கள். இத்தகைய சிறப்புமிக்க டிஸ்னி பொழுதுபோக்கு பூங்கா, கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, நான்கு மாதங்களாக மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், பொதுமக்களுக்காக சனிக்கிழமையன்று இந்த பொழுதுபோக்கு பூங்கா திறக்கப்பட்டுள்ளது. பூங்காவிற்கு வருபவர்களை வால்ட் டிஸ்னி கதாபாத்திரங்களை போன்று வேடமணிந்தவர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். டிஸ்னி கதாபாத்திரங்களான மிக்கியும், மின்னியும் ஃப்ளையிங் கிஸ்களை அனுப்பியபோது அதனை பார்வையாளர்கள் இரு கைகளால் ஆர்வத்துடன் பெற்றுக்கொண்டனர்.

டிஸ்னி நிர்வாகம் கேட்டுக்கொண்டபடி, இரண்டு வயதுக்கு மேற்பட்ட அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்ததோடு, சமூக இடைவெளியை கடைப்பிடித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00