கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு : இஸ்ரேலில் அரசை எதிர்த்து ஆயிரக்கணக்கானோர் போராட்டம்

Jul 12 2020 4:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டதாக குற்றஞ்சுமத்தி இஸ்ரேலில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய போது, நோய் தாக்கத்தை இஸ்ரேல் அரசு சிறப்பாகக் கையாண்டதான தகவல்கள் வெளியாகின. ஆனால், தற்போதைய நிலையில், கட்டுப்பாட்டு விதிமுறைகள் காரணமாக லட்சக்கணக்கானோர் வேலையிழந்துவிட்டதாகவும், இதனால் பொருளாதார பிரச்சினைகள் எழுந்துள்ளதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். 21 சதவிகிதம் பேர் வேலையிழந்து விட்டதாகவும், இதற்கு அரசின் தவறான நடவடிக்கைகள் தான் காரணம் என்றும் குற்றஞ்சுமத்தி டெல் அவிவ் நகரில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற போராட்டம் நடைபெற்றது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், போராட்டத்துக்கு போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர். இருப்பினும் ஏராளமான பொதுமக்கள் அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பியபடி போராட்டத்தில் பங்கேற்றனர். இதற்கிடையே, கொரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்தி பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடந்த சில நாட்களுக்கு முன் உத்தரவிட்டார். இதையடுத்து, நோய் தொற்று பரவத் தொடங்கியதால், கடந்த வாரத் தொடக்கத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இது தான் இப்போராட்டத்துக்குக் காரணம் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00