உலகம் முழுவதும் 1 கோடியே 30 லட்சம் பேருக்கு பாதிப்பு : கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் தென் அமெரிக்க நாடுகள்

Jul 12 2020 5:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலக அளவில் ஒரு கோடியே முப்பது லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளதாக அண்மைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது உலகின் பெரும்பாலான நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய நிலையில் உலகம் முழுவதும் ஒரு கோடியே முப்பது லட்சம் பேர் கொரோனா வைரஸ் பிடியில் இதுவரை சிக்கியதாக புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன. நோய் தொற்று ஏற்பட்டு சுமார் ஐந்து லட்சத்து 70 ஆயிரம் பேர் உயிரிழந்த நிலையில், 75 லட்சம் பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். உலகிலேயே அமெரிக்காவில் தான் அதிக எண்ணிக்கையிலானோர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். 33 லட்சத்து 55 ஆயிரம் பேருக்கு மேலான அமெரிக்கர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக பிரேசில் நாட்டில் 18 லட்சத்து 40 ஆயிரம் பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் தற்போது வைரஸ் பரவுவது ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளது. இருப்பினும் தென்னமெரிக்க நாடுகளில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் அரசுகள் தவித்துவருகின்றன. சீனாவில் மிகக்குறைந்த எண்ணிக்கையிலானோருக்கு தினமும் பாதிப்புக்கள் கண்டறியப்படுகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00