அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு இந்திய வம்சாவெளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிட வாய்ப்பு - அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியீடு

Jul 30 2020 10:39AM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு, ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, கமலா ஹாரிஸ் தேர்வாக வாய்ப்பிருப்பதாக, அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க அதிபர் தேர்தல், வரும் நவம்பரில் நடைபெற உள்ளது. ஜனநாயகக் கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன், போட்டியிடுகிறார். துணை அதிபர் பதவிக்கு போட்டியிட உள்ள வேட்பாளரை தேர்வு செய்யும் பணியில், ஜோ பிடன் ஈடுபட்டுள்ளார். அதற்கான அறிவிப்பு, அடுத்த வாரத்தில் வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஜோ பிடன் நேற்று முன்தினம், செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அவரது கையில் இருந்த காகிதத்தில், சில குறிப்புகள் எழுதப்பட்டு இருந்தன. அந்த புகைப்படம், அமெரிக்க ஊடகங்களில் வெளியாகி உள்ளது. அதில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், கலிபோர்னியா மாகாண செனட்டருமான, கமலா ஹாரிஸ் பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்நிலையில், கமலா ஹாரிஸ் குறித்து, ஜோ பிடனுக்கு நல்ல அபிப்ராயம் இருப்பதால், துணை அதிபர் பதவிக்கு போட்டியிட, அவருக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக, அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுகுறித்து, ஜோ பிடன் தரப்பு, கருத்து தெரிவிக்கவில்லை.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00