அமெரிக்க தேர்தலை ஒத்திவைக்க சொல்லவில்லை - அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்டி

Aug 1 2020 10:29AM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்க அதிபர் தேர்தலை ஒத்திவைக்க வேண்டுமென, கூறியதற்கு மறுப்பு தெரிவித்துள்ள அதிபர் ட்ரம்ப் அது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல், நவம்பர் 3ல் நடக்கவுள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில், தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப், மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார். பெரும்பாலான மாகாணங்களில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில், டிரம்பிற்கு பின்னடைவு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் ட்ரம்ப் கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக, அதிபர் தேர்தலில், மக்கள் பாதுகாப்பாக வாக்களிக்க முடியாத சூழல் நிலவுகிறது எனக்கூறினார். தபால் வாயிலாக வாக்களித்தால், துல்லியமான முடிவுகளை அறிந்து கொள்வதில் பிரச்னை ஏற்படும் எனக்கூறிய அவர், அதில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். எனவே, மக்கள் பாதுகாப்பான முறையில் வாக்களிக்கும் சூழல் ஏற்படும் வரை, அதிபர் தேர்தலை தள்ளி வைக்கலாமே என டிரம்ப் தெரிவித்திருந்தார். இதற்கு கடும் எதிர்பு கிளம்பவே, அதை மறுத்து அதிபர் டொனால்ட் டிரம்ப் விளக்கமளித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00