இங்கிலாந்து முன்னாள் வீரர் இயன் போத்தமுக்‍கு கவுரவம் - நாடாளுமன்றத்தின் 'ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ்' உறுப்பினராக நியமனம்

Aug 1 2020 1:01PM
எழுத்தின் அளவு: அ + அ -
பிரிட்டீஷ் நாடாளுமன்றத்தின் 'ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ்' உறுப்பினராக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆல் ரவுண்டர் இயன் போத்தம் நியமிக்‍கப்பட்டுள்ளார்.

கடந்த 1977ம் ஆண்டுமுதல் 1992ம் ஆண்டு வரை 102 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம்பெற்றவர், இயன் போத்தம். கிரிக்‍கெட்டுக்‍காகவும்ம, சமூகப் பணிகளுக்‍காக இவரது சேவையைப் பாராட்டி கடந்த 2007ம் ஆண்டு, இயன் போதமுக்‍கு நைட் ஹுட் கவுரவம் அளிக்‍கப்பட்டது. ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறும் பிரெக்ஸிட்டை ஆதரித்தவர் இயன் போத்தம். இயன் போதமை கவுரவிக்‍கும் வகையில், அவர் பிரிட்டீஷ் நாடாளுமன்றத்தின் 'ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ்' உறுப்பினராக நியமிக்‍கப்பட்டுள்ளார். கடந்த 2011ம் ஆண்டு இங்கிலாந்து மகளிர் அணியின் கேப்டன் ரசேல் ஹெய்ஹூ பிளிண்ட் என்பவர் உறுப்பினராக்கப்பட்டார். அதன் பிறகு தற்போது இயன் போத்தம் சேர்க்கப்பட்டுள்ளார். டேவிட் ஷெப்பர்ட், காலின் கவுட்ரி, லியரி கான்ஸ்டன்டைன் ஆகியோருக்கும் இதற்கு முன்னதாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. 64 வயதாகும் இயன் போத்தம், புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட 36 பேர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00