ஜெர்மனியில் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தக்கோரி போராட்டம் : ஆயிரக்கணக்கானோர் ஒரே இடத்தில் கூடியதால் பரபரப்பு

Aug 2 2020 12:28PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஜெர்மனி தலைநகர் பெர்லினில் ஆயிரக்‍கணக்‍கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜெர்மனியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கடந்த சில நாட்களாக தொற்று மேலும் பரவி வரும் நிலையில், இதுவரை 2 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். மொத்தம் 9 ஆயிரத்து 224 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். கொரோனா பரவலை தடுக்‍கும் வகையில், பல்வேறு கட்டுப்பாடுகள் தொடர்ந்து அங்கு அமலில் இருந்து வருகின்றன. இந்நிலையில் நேற்று, தலைநகர் பெர்லினில் உள்ள பிரான்ட்பர்க் கேட்டிலிருந்து டியர்கார்டன் பார்க் வரை மக்கள் ஊர்வலமாக சென்றனர். கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான வாசகங்கள் தாங்கிய பதாகைகளை ஏந்திய படி சென்றனர். கூட்டத்தில் ஒரு சிலர் தவிர யாரும் மாஸ்க் அணியவில்லை. ஊர்வலத்தில் கலந்து கொண்ட சிலர் எங்கள் சுதந்திரம் பறிக்கப்படுகிறது என்று கூச்சலிட்டனர். இந்த ஊர்வலத்தில் அரசியல்வாதிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00