ஜப்பானில் அணுகுண்டு வீசப்பட்டதன் 75-வது நினைவு தினம் : உலகம் முழுவதும் அணுகுண்டுகளை அழிக்க வேண்டுகோள்

Aug 9 2020 5:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகம் முழுவதும் உள்ள அணு ஆயுதங்களை அழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ள ஜப்பான் நாட்டின் நாகசாகி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இரண்டாம் உலகப் போரின் இறுதியில், 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி ஜப்பான் நாட்டின் நாகசாகி நகரின் மீது Fat Man என்ற அணுகுண்டை அமெரிக்கா வீசியது. சுமார் பத்தாயிரம் பவுண்டு புளூட்டோனியம்-239 வெடிபொருளை கொண்ட இந்த அணுகுண்டு மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியது. இதற்கு மூன்று நாட்கள் முன்பாக ஹிரோஷிமா நகரின் மீது லிட்டில் பாய் என்ற அணுகுண்டை அமெரிக்கா வீசியிருந்தது. இந்த குண்டுவீச்சுக்களின் போது இரு நகரங்களும் அடியோடு அழிந்ததுடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்த கொடூர அணுகுண்டுகள் வீசப்பட்டதன் 75வது நினைவு தினம் இன்று நாகசாகியில் கடைபிடிக்கப்பட்டது. இதே போல் கடந்த 6ம் தேதியன்று ஹிரோஷிமாவிலும் நினைவு தின நிகழ்ச்சி நடத்தப்பட்டு, அணுகுண்டு வீச்சியில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகர மேயர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய போது, உலகம் முழுவதும் அணு குண்டுகளை அழிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மிகக்குறைந்த எண்ணிக்கையிலானோர் மட்டும் அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்ற அனுமதிக்கப்பட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00