ஆப்பிள் டெய்லி நாளிதழ் உரிமையாளர் கைது : புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை - சீனா

Aug 10 2020 6:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆப்பிள் டெய்லி நாளிதழின் உரிமையாளரை சீனா கைது செய்திருப்பது உலக அளவில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

கடந்த ஜுன் மாதம் சீனா அமல்படுத்திய புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்தின் மூலம், ஒரு நாடு- இரண்டு கொள்கை என்ற தன்மை முடிவுக்கு வந்தது. இதனால், ஹாங்காங் நகர மக்கள் அனுபவித்துவந்த சிறப்பு உரிமைகளும் பறிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, அமெரிக்கா, பிரிட்டன் நாடுகள் ஹாங்காங் நகருக்கு அளித்துவந்த சிறப்பு வர்த்தக அந்தஸ்த்தை திரும்பப்பெற்றன. சீனாவின் புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்திற்கு பெரிய அளவில் எதிர்ப்புக்கள் அதிகரித்தன. இந்நிலையில், ஹாங்காங் நகர மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடிவந்த ஆப்பிள் டெய்லி நாளிதழின் உரிமையாளர் ஜிம்மி லாய் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது இரு மகன்களும், பணியாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக சீனா அறிவித்துள்ளது. வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து, பொதுமக்களிடையே வதந்திகளைப் பரப்பி பொது அமைதிக்கு ஊறு விளைவித்ததாக அவர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00