கொரோனா தடுப்பூசியை அதிகாரபூர்வமாக கொண்டு வந்தது ரஷ்யா - மகளுக்கு தடுப்பூசியை செலுத்தியதாக அதிபர் புடின் தகவல்

Aug 12 2020 3:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா தடுப்பூசியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதாக ரஷ்யா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம், கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடித்த முதல் நாடு என்ற பெருமையை ரஷ்யா பெற்றுள்ளது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அரசு கூட்டத்தில் பேசுகையில், கொரோனா தடுப்பூசி, தேவையான அனைத்து சோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டதாகவும், இந்த தடுப்பூசி வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்கான நீடித்த நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குவதாகவும் தெரிவித்தார். தனது மகளுக்கும் இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும், அதிபர் புதின் குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து, இந்த தடுப்பூசி, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுவதாக, ரஷ்ய அதிபர் புதின் அதிகாரபூர்வமாக அறிவித்தார். மருத்துவ ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு, தடுப்பூசி முதலில் போடப்படும் எனவும், அவர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் இந்த தடுப்பூசியின் நம்பகத்தன்மை குறித்து, உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள விஞ்ஞானிகள் கேள்வி எழுப்பிய நிலையிலும், தடுப்பூசியை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதாக ரஷ்யா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00