இந்திய வம்சாவளியான கமலா ஹாரீஸ் துணை அதிபர் வேட்பாளர் : ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோபிடன் அறிவிப்பு

Aug 12 2020 2:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்‍க அதிபராக தான் தேர்வு செய்யப்பட்டால், இந்திய தமிழ் வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸ் துணை அதிபர் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் குடியரசு கட்சி வேட்பாளராக அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் ஜோபிடன் களமிறங்கியுள்ளார். இந்நிலையில், ஜோபிடன் தனது டுவிட்டரில், அமெரிக்கா அதிபராக தாம் தேர்ந்தெடுக்‍கப்பட்டால், இந்திய தமிழ் வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸை துணை அதிபர் வேட்பாளராக நியமிப்பேன் என அதிரடியாக அறிவித்துள்ளார். கறுப்பர் இனத்தவர்கள் வாக்குகளை கவரவே கமலா ஹாரீசை துணை அதிபர் வேட்பாளராக ஜோபிடன் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கமலா ஹாரீஸ் தனது டுவிட்டர் பதவில், தன்னை துணை அதிபர் வேட்பாளராக ஜோபிடன் அறிவித்ததை, மிகப்பெரிய கவுரமாக கருதுவதாக குறிப்பிட்டுள்ளார். தற்போது ஜனநாயக கட்சி செனட்டராக இருக்கும் கமலா ஹாரீஸ், கலிஃபோர்னியா அட்டர்னி ஜெனராலாகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00