உலக அளவில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் தினசரி எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவாக புதிய உச்சம் - கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 7 ஆயிரம் பேருக்‍கு தொற்று உறுதி

Sep 15 2020 12:56PM
எழுத்தின் அளவு: அ + அ -
உலக அளவில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் தினசரி எண்ணிக்கை இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 3 லட்சத்து 7 ஆயிரத்து 930 பேருக்‍கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, உலகம் முழுவதும் 2 கோடியே 94 லட்சத்து 40 ஆயிரத்து 448 பேர் கொரோனாவால் பாதிக்‍கப்பட்டுள்ளனர். இதில், 2 கோடியே 12 லட்சத்து 75 ஆயிரத்து 21 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் சர்வதேச அளவில் 3 லட்சத்து 7 ஆயிரத்து 930 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது இதுவரை இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையாகும். உலக நாடுகளிலேயே இந்தியா, அமெரிக்கா, பிரசில் ஆகிய நாடுகளில்தான் மிக அதிக எண்ணிக்கையிலான தினசரி கொரோனா நோய்த்தொற்று பதிவு செய்யப்படுகிறது.

இதனிடையே, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா நோய்த்தொற்றுக்கு உலகம் முழுவதும் 5 ஆயிரத்து 537 பேர் பலியாகியுள்ளனர். இந்த எண்ணிக்கையிலும் அமெரிக்கா, இந்தியா, பிரசில் ஆகிய நாடுகள் முன்னிலை வகிக்கின்றன. அமெரிக்கா, இந்தியா ஆகிய இரு நாடுகளிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும், பிரசிலில் 800-க்கும் மேற்பட்டவர்களும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00