வெள்ள நிவாரணங்களை கொண்டு சேர்ப்பதில் சிறப்பாகப் பணியாற்றியதாக வடகொரிய ராணுவத்துக்கு அதிபர் பாராட்டு

Sep 15 2020 3:17PM
எழுத்தின் அளவு: அ + அ -
வெள்ள நிவாரணங்களை கொண்டு சேர்ப்பதில் சிறப்பாகப் பணியாற்றியதாக வடகொரிய ராணுவத்துக்கு அதிபர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

வடகொரியாவை இந்த ஆண்டில் மட்டும் நான்கு புயல்கள் தாக்கிவிட்டன. நான்காம் புயலான மேசாக், கடந்த சில நாட்களுக்கு முன், நாட்டின் பெரும்பாலான பகுதிகளைத் தாக்கியது. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாகக் காட்சியளித்தது. ஏராளமான நகரங்களுக்குள் புகுந்த மழை வெள்ளம், குடியிருப்புப் பகுதிகளில் ஆறு போல் ஓடியது. இதே போல் விளை நிலங்களில் விளைந்திருந்த பயிர்களையும் மழை நீர் அடித்துச் சென்றது. இதனால் பெருமளவு இழப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து வெள்ள பாதிப்பு பகுதிகளை நேரில் ஆய்வு செய்த அதிபர் கிம் ஜோங் உன், நிவாரணப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள ராணுவத்துக்கு உத்தரவிட்டார். மேலும், கட்டுமானப் பணியில் திறமை மிக்க இருபதாயிரம் பேரை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி, சேதமடைந்த கட்டடங்களைப் புனரமைக்க உத்தரவிட்டார். இந்நிலையில், நிவாரணப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டதாக தற்போது அதிபர் கிம் ஜோங் உன் ராணுவத்துக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார். கும்சான் கன்ட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய அதிபர், ராணுவத்தினரை நேரில் அழைத்துப் பாராட்டு தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00